பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு: சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில் இந்தியாவின் முப்படைகள் பங்கேற்கின்றன. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Update: 2023-07-07 06:15 GMT

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் வருகிற ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்கின்றன. அத்துடன் மூன்று ரபேல் போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன. இந்த அணிவகுப்பில் பங்கேற்பதற்காக 266 பேர் கொண்ட இந்திய முப்படையினர் குழு நேற்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டனர் .


இவர்கள் பிரெஞ்சு படையினருடன் இந்த பிரம்மாண்ட அணி வகுப்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை ராணுவம் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் ராணுவத்துக்கு இடையே முதல் உலகப்போரில் இருந்தே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


SOURCE:DAILY THANTHI

Similar News