இந்தியாவின் G20 தலைமை பொறுப்பு: வளரும் நாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்!

ஜி 20 தலைமை பொறுப்பில் தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

Update: 2023-01-05 04:00 GMT

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம், மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 உள்ளது. ஜி-20 என்பது உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட 20 நாடுகளின் குழுவாகும்.


இந்தியா இப்போது இந்த ஜி-20 குழுவிற்கு தலைமைப் பொறுப்பு, இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில் ஜி-20 தலைவர் பதவி வகித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஜி-20 மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்த இந்தியாவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் ஏற்கனவே குறிப்பிட்டதை போல இந்தியா தற்போது ஜி-20 தலைமை பொறுப்பில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறது.


உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் என்றும் நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம். உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைதத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. ஜி 20 தலைமை பொறுப்பில் நிகழ்ச்சி நிரலில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: The Print

Tags:    

Similar News