100 கோடி தடுப்பூசி டோஸ்கள்.. ஏழை நாடுகளுக்கு கை கொடுக்கும் 'ஜி7' நாடுகள்.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவிகரம் நீட்டி வருகிறது. அதன் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-06-11 08:31 GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவிகரம் நீட்டி வருகிறது. அதன் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டனர். இதில் இருந்து மக்களை காக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசி போடும் பணியில் பணக்கார நாடுகள்தான் முன்னிலையில் உள்ளது. இதனால் ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்றடையவில்லை. பொருளாதார பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக கூறியுள்ளது.

Similar News