திருப்பூரில் சரளமாக புழங்கும் கஞ்சா - கணக்கு காட்ட குறைந்த அளவே பதியப்படுகிறதா வழக்குகள்?

திருப்பூரில் பரவலாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-25 11:39 GMT

திருப்பூரில் பரவலாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை குறித்து போலீசார் ஆய்வு செய்கின்றனர். டி.ஜி.பி உத்தரவுக்கு பின்னர் இன்னும் பெரிய அளவில் மாநகர போலீஸ் போதை பொருள்களை பிடிக்கவில்லை.

அவ்வப்போது பெயருக்கு கஞ்சா வழக்கு பதிவு செய்து வருகின்றனர், இதன் பின்னணியில் இருக்கும் நண்பர்கள் எங்கிருந்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்கின்றனர் என போலீசார் விசாரணை செய்வதில்லையாம் பெரும்பாலும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா கொண்டுவரப்பட்டு பல இடங்களில் விற்கப்படுகிறது.

இதையெல்லாம் அறிந்து உயர் அதிகாரிகளிடம் கணக்கு காட்டவே போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர் என குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும் இது குறித்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


Source - Dinamalar

Similar News