ஜார்ஜ் பொன்னையா பங்கேற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருமனை ஸ்டீபன் மீது பலாத்கார வழக்கு !

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டீபன் மற்றும் 8 பேர் மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-08-12 07:44 GMT

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பங்கேற்ற நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் அருமனை ஸ்டீபன் மீது பாலியல் பலாத்காரம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து மதம் குறித்தும் பாரதமாதா குறித்தும் பாரதப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அருமனை ஸ்டீபனும் கைது செய்யப்பட்டார்.

பிறகு இவர்கள் ஜாமின் கோரி தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் பொன்னையா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டீபன் மற்றும் 8 பேர் மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

கணவரை பிரிந்து வாழும் அந்தப்பெண் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்தார். அதன் உரிமையாளரான ஜெபர்சன் என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாக பதிவு செய்தார். பிறகு நாகர்கோவில் என்.ஜி.ஓ., காலனி வீட்டில் அடைத்து வைத்து அந்த பெண்ணை ஸ்டீபன் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்ததால் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ஸ்டீபனின் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஸ்டீபன் கைதாகி உள்ளதால் அந்தப் பெண் ஆன்லைன் மூலமாக மீண்டும் பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மார்த்தாண்டம் மகளிர் காவல்துறையினர் ஸ்டீபன், கபர்ஸ் ஜெபராஜ் உட்பட எட்டு பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுய வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத இது போன்றவர்கள் பொது மேடைகளில் பாரதப் பிரதமரை பற்றியும் பாரதமாதாவை பற்றியும் அவதூறாக பேசி மக்கள் மத்தியில் தீய எண்ணத்தை விளைவிக்க நினைப்பதை ஒரு போதும் மன்னிக்க முடியாது என்றும் இதுபோன்ற பாதிரியார்களை சர்ச் நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Source : Dinamalar 

IMAGE COURTESY : Dinamalar

Tags:    

Similar News