சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் - மாற்று சக்திக்கு வித்திடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : நாளை எடுக்கப்படும் முக்கிய முடிவுகள்.!

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் - மாற்று சக்திக்கு வித்திடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : நாளை எடுக்கப்படும் முக்கிய முடிவுகள்.!

Update: 2019-07-23 04:25 GMT

மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஜூலை 24 அன்று நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.


ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 36வது கூட்டம், 25ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள், காற்றாலை திட்டங்கள் ஆகியவற்றின் மீதான வரி விதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.


இதையும் படியுங்க: ‘ஸ்ரேஷ்டபாரத்’ நிகழ்ச்சியின் மூலம் வடஇந்தியாவிலும் கற்பிக்கப்படும் தமிழ் – இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிலடி.!


உள்நாட்டு மின் வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மின் வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாகக் குறைப்பது குறித்தும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.


மேலும், இக்கூட்டத்தில், லாட்டரி மீதான வரி விதிப்பும் முடிவு செய்யப்படலாம். தற்போது, மாநில அரசு லாட்டரிக்கு, 18 சதவீதமும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிக்கு, 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.


Similar News