4,5 ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாத நிலை - கல்வித் துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது கல்வித்துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-25 06:45 GMT

கொரோனா தொற்று காரணமாக 2020_2021,2021-2022 ஆம் கல்வி ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் என்பது இல்லாமல் இருந்தது. இதனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த தேர்வு மாணவர்களின் கற்றல் திறனை சரி செய்ய உதவும் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் இந்த மதிப்பீட்டு தேர்வு ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடந்தது. அதில் 4,5 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் கணிசமானவர்கள் ஒன்றாம் வகுப்பு கற்றல் நிலையிலேயே இருப்பதும் குறிப்பாக இந்த மாணவர்கள் மொழிப்பாடத்தில் எழுத்துகளை அறியாததால் எழுத்துக் கூட்டி படித்து பொருள் அறிய சிரமப்படுவதாகவும், கணக்கு பாடத்தில் எண்ணும் எண் மதிப்பும் அறியாததால் கூட்டல் ,கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.


இதனை சரி செய்யும் வகையில் அந்த மாணவர்களுக்கு இணைப்பு பாடப் பயிற்சி வழங்கவும் இதன் மூலம் அவர்களின் கற்றல் அடைவு மேம்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக பயிற்சி கையேடு ஒன்றையும் கல்வித்துறை வடிவமைத்து இருக்கிறது.





 


Similar News