தமிழர்களின் செங்கோலை பிரதமர் பெருமைபடுத்திவிட்டார் - கவர்னர் தமிழிசை பாராட்டு

நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோலை பிரதமர் நிறுவுவதற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-25 03:30 GMT

தெலுங்கானா கவர்மெண்ட் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல் . அன்றைய தமிழர்களின் நீதி பரிபாலான முறை நபரை உலகத்திற்கே வழிகாட்ட கூடியதாக அமைந்திருந்தது. திருக்குறளில் வரும் 'செங்கோன்மை' அதிகாரம் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி முறையையும் நிர்வாகத்தையும் அழகாக எடுத்து உணர்த்தும்.


அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் அரசாட்சி நீதி வழுவாமல் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு அன்றைய பிரதமருக்கு செங்கோல் கைமாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த பெரியோர்களால் செய்யப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது என்பது தமிழர்களின் சிறப்பு.


அன்றைய நிகழ்வை பின்பற்றி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வருமே 28 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் செய்யப்பட்ட தமிழர்களின் நீதி பரிபாலான முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை. அதற்காக பிரதமருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News