இலவச சைக்கிளை 200 ரூபாய்க்கு விற்கும் அரசு பள்ளி மாணவர்கள் - இலவசத்தின் அவல நிலை இதுதானா?

அரசு இலவசமாக கொடுக்கும் சைக்கிளை மாணவர்கள் வாங்கிய கையோடு கிடைத்த விலைக்கு விற்று செல்வதால் இலவச பொருட்கள் நிலை இதுதான் என்று தெளிவாகியுள்ளது.

Update: 2022-09-20 13:12 GMT

அரசு இலவசமாக கொடுக்கும் சைக்கிளை மாணவர்கள் வாங்கிய கையோடு கிடைத்த விலைக்கு விற்று செல்வதால் இலவச பொருட்கள் நிலை இதுதான் என்று தெளிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நீலகிரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அண்மையில் தொடங்கி வைத்தார்.

தற்பொழுது பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் மிதி வண்டிகளை வாங்கிய மாணவ, மாணவிகள் பலரும் வாங்கி அன்றே விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றிடம் கூறிய பொழுது, 'மலைப்பகுதியான ஊட்டியில் சைக்கிள் எல்லா இடத்துக்கும் பயன்படுத்த முடியாது அதனால் தான் எடுத்து செல்லாமல் விற்பனை செய்கிறோம். 200, 300 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள்' என அலுத்துக்கொள்ளும் விதமாக கூறுகின்றனர்.

இலவசங்களால் பொருளாதார பாதிக்கப்படுகிறது அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்ற கருத்து ஒருபுறமும் இலவசங்கள் தேவை என்ற கருத்து மறுபிறமும் விவாதமாக கிளம்பி கொண்டிருக்கும் சமயத்தில் இலவசமாக தரும் அரசு சைக்கிளை இப்படி 200, 300 ரூபாய்க்கு மாணவர்கள் விற்று செல்லும் நிலை தொடர்கிறது.


Source - Junior Vikatan

Similar News