ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதா? சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்!

ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதா? சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்!

Update: 2019-11-08 15:47 GMT

சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, அவர்களது குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதே பாதுகாப்பு தொடர்ந்தது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட காலத்தில் அவர்கள் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்த காரணத்தினால் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.


அதற்கு பிறகு அதற்கான தேவை இல்லாத போதும், அரசியல் அந்தஸ்துக்காக தொடர்ச்சியாக சிறப்பு படை பாதுகாப்பை நீடித்துக்கொண்டே வந்தனர் காங்கிரஸ் கட்சியினர். இதனால் பல கோடி ரூபாய் வருடா வருடம் ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்காக மட்டுமே செலவிட வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.


இதனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி அவர்களுக்கு சி.ஆர்.ப்.எப். எனப்படும் துணை ராணுவப் படைகளின் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு நாடு முழுவதும் வழங்கப்படும்.



Similar News