"கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பல வழக்குகளில் ஜாமீன் பெற்று தன்னை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும்" : உரிக்கும் வெயிலில் ஹெச். ராஜாவின் தெறிக்கும் பிரச்சாரம்.!

"கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பல வழக்குகளில் ஜாமீன் பெற்று தன்னை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும்" : உரிக்கும் வெயிலில் ஹெச். ராஜாவின் தெறிக்கும் பிரச்சாரம்.!

Update: 2019-03-24 14:46 GMT

தமிழகம், புதுச்சேரி உட்பட 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.


இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் இதை அறிவித்தார்.


தன் மகன் கார்த்திக் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என ப. சிதம்பரம் மாபெரும் முயற்சி செய்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.


சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதை அடுத்து டெபாசிட் தொகையை இழந்தார். இந்த நிலையில் அவரே மீண்டும் சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


பா.ஜ.க சார்பில் ஹெச்.ராஜா இதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அவர் தொகுதி முழுவதும் அ.தி.மு.க-வினரின் முழு ஒத்துழைப்புடன் சூறாவளி சுற்றுப் பிரச்சாரம் செய்து வருகிறார். கார்த்தி சிதம்பரம், தான் போட்டி என்பது உறுதியானதும் ஹெச்.ராஜா அவர்கள், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதுள்ள பல வழக்குகள் மற்றும் ஊழல் குறித்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.  


“கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய அவருக்கு நேரமிருக்காது. பல வழக்குகளில் ஜாமீன் பெற்று தன்னை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். ஆகவே எப்போதும் உங்களுடனே இருக்கும் எனக்கு வாக்களியுங்கள்” என பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


Similar News