பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான ஹமீது அன்சாரி : அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு உருக்கத்துடன் நன்றி

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான ஹமீது அன்சாரி : அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு உருக்கத்துடன் நன்றி

Update: 2018-12-19 17:16 GMT

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பொறியாளர் ஹமீது அன்சாரி,  தன் விடுதலையாக உதவிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து நன்றி கூறினார்.


மும்பையை சேர்ந்த ஹமீது அன்சாரி, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது இணையதள தோழியை பார்ப்பதற்காக பஞ்சாப், ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் சென்றார். அப்போது சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அடையாள அட்டையை போலியாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் இந்திய அரசின் உளவாளியா என்பது குறித்தும் பல கோணங்களில் பாகிஸ்தான் இராணுவம் அவரை சிறையில் வைத்து 6 ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது.


இந்த நிலையில் அவரை விடுதலை செய்ய உதவுமாறு ஹமீது அன்சாரியின் குடும்பத்தினர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். சுஷ்மா சுவராஜும் ஹமீது அன்சாரி விடுதலை அடைவதற்கான தூதரக முயற்சிகளை முடுக்கிவிட்டார்.  இந்த நிலையில் 6 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு நேற்று விடுவிக்கப்பட்ட ஹமீது அன்சாரி, வாகா எல்லையில் இந்திய மண்ணை முத்தமிட்டு பெற்றோருடன் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். தனது விடுதலைக்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.

Similar News