'ஹலோ எவரிபடி வீட்டிலேயே நியூ இயர் கொண்டாடுங்க' - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை வைத்த செக்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில்.

Update: 2022-12-29 08:14 GMT

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில்.

வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து குடும்பத்துடன் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவில் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Similar News