இந்திய பிரதமருக்கு பிரான்ஸ் தரும் கவுரவம் - என்ன தெரியுமா?
தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான ராணுவ கூட்டின் 25 - வது ஆண்டு இதுவாகும். இதை கௌரவிக்கும் விதத்தில் ஜூலை மாதம் 14- ஆம் தேதி 'பேஸ்டில் தினம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிற பிரான்ஸ் நாட்டின் தேசியத்தில் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பிரான்ஸ் கௌரவப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதில் இடம்பெறுகிற அணிவகுப்பில் பிரான்ஸ் படையினருடன் இந்திய படைவீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி மேற்கொள்கிற இந்த பயணத்தின் வாயிலாக இருதரப்பு ராணுவக் கூட்டும் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இருதரப்பு ராணுவ, கலாச்சார, அறிவியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய லட்சிய நோக்கங்களுக்கும் இது துணை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.