"ஐயர் சிக்கன்" என பெயர் வைத்து பிரபலம் அடைய நினைத்து வேறு வழியின்றி மண்டியிட்ட மதுரையின் கிருஸ்துவ மதத்தினரின் நடத்தும் ஹோட்டல்!

"ஐயர் சிக்கன்" என பெயர் வைத்து பிரபலம் அடைய நினைத்து வேறு வழியின்றி மண்டியிட்ட மதுரையின் கிருஸ்துவ மதத்தினரின் நடத்தும் ஹோட்டல்!

Update: 2019-08-02 04:53 GMT

மதுரையில் உள்ள, ஓட்டல் ஒன்றில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.




https://twitter.com/anandk/status/1156983930681057280?s=20




https://twitter.com/srinivasankmu/status/1156881802868359168?s=20


இதையடுத்து நேற்று மாலை பிராமணர்களின் போராட்டத்தை அடுத்து, அந்த உணவின் பெயர் நீக்கப்பட்டதுடன், ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கடிதமும், எழுதி கொடுத்தார்.


மதுரை, வடக்கு மாசி வீதியில், 'மிளகு' என்ற ஓட்டல் உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவு பட்டியலில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என்ற பெயர் இருந்தது. மேலும், இது குறித்து, இணையதளங்களில், விளம்பரமும் செய்தனர். ஜாதி துவேஷத்துடன், அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.இந்த உணவு பெயரை கண்டித்து, பிராமணர்கள் நேற்று மாலை, அந்த ஓட்டலை முற்றுகையிட்டனர்.


இதையடுத்து, ஓட்டல் மேலாளர், டுவிக் என்பவர், 'தவறுக்கு வருந்துகிறோம். சர்ச்சைக்குரிய, அந்த பெயர், உடனே நீக்கப்படும்' என, தெரிவித்தார்.மேலும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் தர, ஓட்டல் உரிமையாளர் ஒப்புக்கொண்டதால், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.




https://twitter.com/SuryahSG/status/1157139135129194497?s=20


இந்த ஹோட்டல் ஏற்கனவே, தரமற்ற உணவு மற்றும் டெலிவரி இவற்றால் சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. அண்மைக் காலமாக இந்த உணவகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இதில் பணிபுரிந்த சிலர் கடந்த ஒரு வருடங்களில் இங்கிருந்து வேலையைத் துறந்து வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர்.


இந்நிலையில், தங்கள் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் தேட என்ன செய்யலாம் என்று இதன் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் யோசித்த போது, அவர்களுக்குத் தோன்றியதுதான், வழக்கம் போல் சினிமாக்காரர்கள் கையாளும் இந்த உத்தி. அதன்படி, திடீரென்று இந்த உணவகத்தில் பேஸ்புக் பக்கத்தில் வேண்டுமென்றே, கும்பகோணம் 'ஐயர்' சிக்கன் என்ற பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.


ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மத மோதலைத் தூண்டும் வகையில், கிறிஸ்துவர்களான அவர்கள் வேண்டுமென்றே செய்த இந்தச் செயலால், எதிர்பார்த்தது போலவே, எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த விளம்பரத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டனர்.


சிலர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப் பட்ட செல்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை அடுத்து, தாங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்த படி, தங்களுக்கு போன் செய்தவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இது அறியாமல் நடந்துவிட்ட தவறு, நாங்கள் அதை எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.


Similar News