எத்தனை வகை ஸ்னானம் ( குளியல்) உண்டு..? சாணக்கியர் சொல்லும் உடல் தூய்மை ..!

எத்தனை வகை ஸ்னானம் ( குளியல்) உண்டு..? சாணக்கியர் சொல்லும் உடல் தூய்மை ..!

Update: 2020-01-07 02:36 GMT

ந்து மதம் உடல் தூய்மையை ஆன்மீக முன்னேற்றத்திற்கு முதன்மையாக வலியுறுத்துகிறது.  இந்து மத வழக்கப்படி ஒருவர் மூன்று முறை தண்ணீரால் ஸ்னானம் செய்ய வேண்டும், காலை நான்கரை மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் மற்றும் மதியம் நேரத்தில் பிறகு ஆறு மணிக்குமேல், இந்த நேரங்களில் குளிக்க வேண்டும்.  `அதுமட்டுமல்லாமல் வேலையே சென்று வீட்டிற்குள் செல்லும் போது நமது கால்களையும் பாதங்களையும் நன்றாக கழுவி விட்டு தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.  இப்படி கால்கள் மற்றும் கைகளை கழுவி தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு வீட்டிற்குள் நுழைவது நம்மை மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சி அடைய செய்யும்.  இப்படி செய்வதினால் நம் தொழில் உள்ள பழைய செல்கள் எல்லாம் அகற்றப்பட்டு உடல் ஆரோக்யம் அடையும்.  தொழில் நுண்ணுயிரிகளின் பாதிப்பு தடுத்து நிறுத்தப்படும்.  .   


நான்கு வகையான ஸ்னானங்கள் சாணக்யரால் சொல்லப்பட்டு இருக்கிறது


சூர்யா ஸ்னானம்


அதிகாலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் கைகளை தலைக்கு மேலாக அகலமாக விரித்து கிழக்கு நோக்கி 10 நிமிடங்கள் சூர்யா ஒளி படுமாறு நிற்க வேண்டும், இது போல செய்தால் உடலில் எவ்வளவு கொடிய நுண்ணுயிரிகள் இருந்தாலும் அழிந்து விடும்


மண் ஸ்னானம்


ஈரமான மண்ணால் உடல் முழுவதும் தேய்த்து விட வேணும், தொழில் உள்ள நுண் துளைகளில் நிரம்புமாறு நன்றாக தேய்த்த பின் 15 நிமிடங்கள் களைத்து துணியால் துடைத்து கொள்ளலாம்.


மகேந்திர ஸ்னானம்


மண் ஸ்னானம் முடிந்த பிறகு துணியால் துடைத்து விட்டு, பிறகு தண்ணீரால் உடலை கழுவுவதால் மகேந்திர ஸ்னானம் எனப்படும். 


மந்திரத்தை ஸ்னானம்


இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு மந்திர ஜெபங்கள் செய்த பின்பு குளிப்பது மந்திர ஸ்னானம் எனப்படும்.


தண்ணீரால் உடலை சுத்தப்படுத்தி கொள்வது என்பது உடலுக்கு மட்டுமல்லாது நம்முடைய மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சோம்பல், அசதி, போன்ற மன நிலைகள் தண்ணீர் உடலில் பட்டவுடன் பறந்தோடுவதை நம் அனுபவித்திருக்கலாம்.  இந்த தண்ணீர் கூடிய வரை குளிர்ந்த நீராக இருப்பது உடலுக்கும் மனதிற்கும் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும்.


Similar News