ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி - இப்படியும் கொண்டாடலாம் புத்தாண்டை...?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி - இப்படியும் கொண்டாடலாம் புத்தாண்டை...?

Update: 2019-12-19 02:53 GMT

மேற்கத்திய
மக்களிடையே மிக பிரபலமான புத்தாண்டு பாடல் ஆல்ட் லேங்க்  சைன்(Auld Lang Syne). இதை டிசம்பர் 31 நள்ளிரவில் பெரும்பாலனவர்கள் பாடி மகிழ்கிறார்கள்


டிசம்பர் 31 நள்ளிரவில் ஜப்பான் நாட்டில் புத்த கோவில்களில்
பெரும் ஆலயமணியை 108 முறை
ஒலிக்கச்செய்கிறார்கள். மனிதர்களிடம் உள்ள 108 வகையான பலவீனங்களை வீழ்த்துவதே இதன்
தார்பர்யமாம்.  அந்நாட்டின் சிறு
குழந்தைகள் விதவிதமான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அப்பரிசினுள் சிறிய
தொகையை மறைத்து கொடுத்து குழந்தைகளை குதுகலப்படுத்துகிறார்கள்.


ஸ்பெயின் நாட்டில்
டிசம்பர் 31 நள்ளிரவில் 12 திராட்சைகளை உண்கிறார்கள். இனிவர விருக்கும் 12 மாதங்கள் அத்திராட்சையை போலவே தித்திப்பானதாய்
அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை


கிரீஸ் நாட்டில்
பாரம்பரிய முறைப்படி கேக் தயாரித்து உண்கிறார்கள் சிறிய தங்கம் அல்லது வெள்ளி
நாணயங்களும் அந்த கேக்குடன் தயாரிக்கப்படுகிறது. அதை உண்பவர்களில் யாருக்கு அந்த
நாணயம் கிடைக்கிறதோ அவர்களுக்கு வரவிருக்கும் ஆண்டு அதிர்ஷடம் மிக்கதாய் அமையும்
என்பது அவர்களின் நம்பிக்கை


உலகின் புகழ்பெற்ற
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்று அமெரிக்காவின் நியுயார்க் நகரில் டைம்
சதுக்கத்தில் டிசம்பர் 31 நள்ளிரவு 11.59 மணியளவில், உருட்டப்படும் ராட்சஷ பந்து. இந்த வண்ணமையான பந்தை
பார்க்க அந்நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவது வழக்கம்

பழங்காலத்து பெரிசியன் நாட்டு மக்கள் புதுவருடத்தையொட்டி முட்டைகளை பரிசளித்து
கொள்வார்களாம். ஒரு வருடத்தின் உற்பத்தி திறனின் குறியீடாக அந்த பரிசு
பரிமாறிகொள்ளப்பட்டது.


Similar News