தீபாவளிக்கு எப்படி கோலம் போடலாம் - இந்து குடும்பத்துடன் சண்டையிட்ட கிறிஸ்துவ குடும்பம்

தீபாவளிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்ட இந்து குடும்பத்தினரிடம் 'இதெல்லாம் ரொம்ப தப்பு' என கிறிஸ்தவ குடும்பம் ஆவேசமான சம்பவம் ஐதராபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-10-26 14:55 GMT

தீபாவளிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்ட இந்து குடும்பத்தினரிடம் 'இதெல்லாம் ரொம்ப தப்பு' என கிறிஸ்தவ குடும்பம் ஆவேசமான சம்பவம் ஐதராபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் தடைபட்டிருந்த கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு அதிக அளவில் நடைபெற்றன. இந்நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்பாக திடீர் சர்ச்சை வெடித்துள்ளது.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இந்த சம்பவம் நடந்துள்ளது, தீபாவளி ரங்கோலி கோலம் போட்டதற்கு எதிர் வீட்டில் இருந்த கிறிஸ்தவ குடும்பம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வாசலில் ரங்கோலி கோலம் போட்டதற்கு அந்த கிறிஸ்தவர் எதிர்ப்பு தெரிவித்தார் மேலும், 'அப்படி கோலம் போட்டால் எப்படி வெளியே சென்று வர முடியுமா?' என ஆவேசமாக கேட்கிறார்கள்.

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவியது இந்த சம்பவம் ஹைதராபாத் சிகாபல்லி நகரில் உள்ள கொல்கொண்டா கிராஸ்கட் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அங்குள்ள இந்து அமைப்புகள் வேகமாக போராட்டத்தில் குறித்தனர். மேலும் அவர்கள் அங்கு 'ஜெய் ஸ்ரீ ராம்' கோசங்களை எழுப்ப ஆரம்பித்த உடன் பதட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டு நிலமை அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டனர்.


Source - One India News 

Similar News