திருச்செந்தூர் முருகர் கோவில் சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கு : இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ்

திருச்செந்தூர் முருகர் கோவில் சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கு : இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ்

Update: 2019-02-18 19:17 GMT

திருச்செந்தூர் முருகர் கோவில் சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்க அமைக்கப்பட்ட திருச்செந்தூர் சுக்கிரவார கட்டளை மடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த மடம், மது அருந்தவும், சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துவதாகவும், தங்க வரும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். மடத்தின் ஒரு பகுதியை இடித்து சீர்செய்வதாகக் கூறி, கட்டிட பொருட்களை இறக்கி வைத்துள்ளதாகவும், புராதான கல் மண்டபத்தை இடித்து, பழமையை பாழ்படுத்திவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.


மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுக்கிரவார கட்டளை சொத்துக்களை மீட்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. செந்தில் ராஜேஷ் என்பவரது வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.  


Similar News