மக்களுக்கான அரிசி திட்டத்தை நான் தடுக்கவில்லை - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி!

மக்களுக்கான அரிசி திட்டத்தை நான் தடுக்கவில்லை - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி!

Update: 2020-04-06 07:32 GMT

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட செய்தி குறிப்பில்:

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கான அரிசியை தடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்தது. இது தவறானது. நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக மாற்றுமாறு இந்திய அரசிடம் கோரினேன். இதனால் மக்கள் தேவைப்படும் போது அரிசி, மளிகை பொருட்களை நேரடியாக வாங்க முடியும்.

இருப்பினும், இந்திய அரசானது ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை விநியோகிக்க கோரியது. அதையடுத்து நிர்வாகமானது வெளிப்படையான முறையில் விநியோகிக்கவும், சமூக தொலைவை பராமரிப்பது தொடங்கி குறைந்த பணியாளர்களை கொண்டு தர திட்டமிடுகிறது. இதுதொடர்பான பணியில் தலைமை செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஆகியோர் ஈடுபட்டு நிலையான முறையை உருவாக்குகின்றனர். அதை புதுச்சேரி அரசு இறுதி செய்தவுடன் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News