'யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்' - பெருமை போங்க கூறிய பிரதமர் மோடி

தமிழக மக்களுக்காக 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை வந்தார்,

Update: 2022-05-27 07:45 GMT

தமிழக மக்களுக்காக 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை வந்தார்,

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி கூறியதாவது, 'தமிழ்நாட்டுக்கு திரும்பத் திரும்ப வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மக்கள் கலாச்சாரம் இந்த மாநிலத்தின் மொழி மிக சிறப்பானது 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என மகாகவி பாரதியார் பாடியுள்ளார்' என்றார்.

மேலும் புதிய கல்விக் கொள்கை பற்றி பேசிய அவர், 'புதிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்கள் அவர்களின் மொழியிலேயே படிக்கலாம். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைவார்கள். யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்! இலங்கை மக்களுக்கு சாலை போக்குவரத்து கலாச்சார மேம்படுத்துதல் என அனைத்தையும் துவங்கியுள்ளோம் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பயணத்தை தொடங்கினோம் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வளர்த்த இந்தியாவை நிறைய கனவுகள் காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வளமானதாக மகிழ்ச்சியானதாக மாற்றுவோம்' எனவும் தெரிவித்தார்.


Source - News 18 Tamil Nadu

Similar News