இந்தியாவின் அதிகாரமிக்க தலைவர்கள் பட்டியலில் 16-வது இடத்தை பெற்ற பா.ஜ.க தேசிய அமைப்பு பொது செயலாளர்.!

இந்தியாவின் அதிகாரமிக்க தலைவர்கள் பட்டியலில் 16-வது இடத்தை பெற்ற பா.ஜ.க தேசிய அமைப்பு பொது செயலாளர்.!

Update: 2019-09-30 10:47 GMT

indianexpress ஊடகம் 2019 ஆம் ஆண்டில் அதிகாரமிக்க 100 இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அதிகாரக் கட்டமைப்பு எப்படி வலுவூட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது.


303 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை புதுப்பித்து வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பல அதிரடி பாணியிலான நடவடிக்கைகளை கையிலெடுத்து இந்தியாவை கட்டமைத்து வருகிறது.


அதன்படி இந்தியன் எக்ஸ்பிரஸின் அதிகாரமிக்கவர்கள் பட்டியல் 2019-ல் பிரதமர் மோடி, அமித் ஷா வரிசையில், பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல் சந்தோஷ் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர் ஆவார். தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணத்துவம் மிக்கவரான இவர், கர்நாடகாவில் எட்டு ஆண்டுகளாக பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர். 2014ஆம் ஆண்டு தென்மாநிலங்களுக்கான கட்சி பொறுப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/SuryahSG/status/1178612896248451072

Similar News