ஊரடங்கை மீறினால் இனி சட்டம் தன் கடமையை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி!

ஊரடங்கை மீறினால் இனி சட்டம் தன் கடமையை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி!

Update: 2020-04-03 12:38 GMT

ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு மாநில தொழிலாளர்கள் பல பகுதிகளில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வெளிமாநிலத்தவர் தங்கவைக்கப்பட்டுள்ள 3 சிறப்பு முகாமில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஊரடங்கை மீறினால் மீது இனி சட்டம் தன் கடமையை செய்யும்" என தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், 144 தடை உத்தரவு யாரையும் புண்படுத்துவதற்காக போடப்பட்ட சட்டம் அல்ல, அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போடப்பட்ட சட்டம், அதை உணர்ந்து தமிழக மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், அரசைப் பொறுத்தவரை ஊடகங்கள் வாயிலாக, பத்திரிக்கை வாயிலாக பல முறை அறிவுறுத்த பட்டிருப்பதாகவும், 144 தடை உத்தரவை கடைப்பிடிப்பது மக்களுடைய கடமை, ஆனால் சிலர் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை எனவே இனி சட்டம் தன் கடமையை செய்யும் என தெரிவித்தார்.

https://twitter.com/polimernews/status/1245989098352975874?s=19

Similar News