அமெரிக்காவை கெஞ்சும் இம்ரான்கான்! இந்திய படைகள் குவிப்பு! பதட்டத்தில் பாகிஸ்தான்!

அமெரிக்காவை கெஞ்சும் இம்ரான்கான்! இந்திய படைகள் குவிப்பு! பதட்டத்தில் பாகிஸ்தான்!

Update: 2019-08-05 02:31 GMT

காஷ்மீர் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் இதை அடுத்து இந்தியா எல்லையில் படைகளை குவித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் சென்ற பயணிகள்மற்றும் சுற்றுலா பயணிகளை காஷ்மீரை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனடையில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் வீரர்களை 7 பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்


இதற்கடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் மீது கொத்து குண்டுகள் வீசப்போவதாககூறி உள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பகுதியில் மீது இந்திய ராணுவம் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு எழுப்பியதைத் தொடர்ந்து அவசரமாக ஆலோசனை கூட்டத்தை இம்ரான் கான் கூட்டினார்.


இதற்கிடையே ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டார்.


இம்ரான் கூறுகையில் "காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்யவேண்டிய நேரம் இது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, வித்தியாசமான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்படுகின்றன. பிராந்தியப் பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் மாறும் சக்தி இருக்கிறது. ஐ.நா.வின் தீர்மானத்தின்படி காஷ்மீர் மக்கள் தங்கள் விருப்பப்படி, உரிமையை நிலைநாட்டி சுதந்திரமாக வாழ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்.


எல்லைப் பகுதியில் கொத்து குண்டுகளை வீசுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதை ஐ.நா. கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டும். மக்கள் மீது இந்திய ராணுவம் தேவையின்றித் தாக்குதல் நடத்துவதையும் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.


Similar News