'பெங்களூரு வரலாற்றில் பொன்னாள்' - 33 ஆயிரம் கோடி ருபாய் திட்டங்களை துவங்கி வைத்து பிரதமர் பேச்சு

கர்நாடகாவில் பிரதமர் மோடி ஒரேநாளில் துவங்கிய திட்டங்களின் மதிப்பு 33,000 கோடி ரூபாய் ஆகும்.

Update: 2022-06-21 11:09 GMT

கர்நாடகாவில் பிரதமர் மோடி ஒரேநாளில் துவங்கிய திட்டங்களின் மதிப்பு 33,000 கோடி ரூபாய் ஆகும்.

நேற்று காலை 11 மணியளவில் சென்னை பெங்களூர் விமானப்படை தளத்திற்கு வந்து இறங்கிய பிரதமர் மோடி பின்பு அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 19 திட்டங்களை துவக்கி வைத்தார்.

துவங்கி வைத்து பேசிய மோடி கூறியதாவது, 'பெங்களூரில் 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை இரட்டை எஞ்சின் அரசுகளால் 10 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம், அது கண்டிப்பாக சாத்தியமாகும் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் ஒரே நாளில் துவக்கி வைத்த இன்னாள் பெங்களூரு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.

ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம் என போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தி திட்டங்களால் நீண்டநாள் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். பெங்களூர் மக்கள் எதிர்காலத்தில் இவ்வாறு நிறைவேற்றப்படும் திட்டங்களால் பெரும் பயனடைவார்கள்' என குறிப்பிட்டார்.


Source - Dinamalar

Similar News