ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் கொண்ட இந்தியா கூட்டணி- நாட்டை வலுப்படுத்துவார்களா? பிரதமர் மோடி காட்டமான கேள்வி!
ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என்று கூறியுள்ள இந்தியா கூட்டணியைப் பார்த்து பிரதமர் மோடி காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் கொண்ட இந்தியா கூட்டணி- நாட்டை வலுப்படுத்துவார்களா? பிரதமர் மோடி காட்டமான கேள்வி!
ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணியில் கூறுகிறார்களே அவர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? என பிரதமர் மோடி காட்டமான கேள்வி எழுப்பினார். உத்திர பிரதேச மாநிலம் மெர்சாப்பூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டனர். வீழ்ச்சியடைந்து வரும் கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு யார் ஓட்டளிப்பார்கள்? அவர்கள் வகுப்புவாதம் மற்றும் மதவாத அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணியினர் கூறுகிறார்கள். அவர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க சமாஜ்வாடி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியல் செய்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்களுடைய ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் நேர்மையான எண்ணங்கள்,நல்ல கொள்கைகள்,தேசிய ஒருமைப்பாடு. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பெயரையே சமாஜ்வாடி கட்சியினர் கெடுத்து விட்டனர். பூர்வாஞ்சல் மாவட்டத்தை மாபியா கும்பலின் புகலிடமாக மாற்றி விட்டனர். நிலமாகட்டும் உயிராகட்டும் மக்களின் உயிரோ உடைமையோ எப்பொழுது பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
யோகி இன்றைக்கு மாநிலத்தை சுத்தமாக நேர்மையாக வைத்திருக்கிறார். ஆனால் இப்போது பாரதிய ஜனதா ஆட்சியில் மாபியா கும்பல் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் தொழில்களுக்கு பாரதிய ஜனதா ஆட்சி முக்கியத்துவம் தருகிறது .அதேபோல மகளிர் அதிகாரம் வழங்குவதிலும் அக்கறை ஆர்வம் காட்டி முனைப்போடு செயலில் இறங்கி வருகிறது.
விஸ்வகர்மா குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது .இவர்களது கைவினைப் பொருட்களுக்கு தேசிய சந்தை உருவாக்கி வருவதோடு உலகளாவிய விற்பனை சந்தையையும் உருவாக்கி வருகிறோம்.பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம் மூலம் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பல்வேறு கைவினைக் கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கி பல குடும்பங்களை வாழ வைக்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால் கைவினைக் கலைஞர்களை ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை.நினைவு இருக்கட்டும், நீங்கள் வெறும் எம்.பியை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. மோடிக்கு வாக்களிப்பதன் மூலம் நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE:Dinaseithi