கொரோனா விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு இந்தியா அப்படி என்னதான் செய்துவிட்டது ? கால வரிசைப்படி இதோ ஒரு பார்வை.!

கொரோனா விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு இந்தியா அப்படி என்னதான் செய்துவிட்டது ? கால வரிசைப்படி இதோ ஒரு பார்வை.!

Update: 2020-04-10 04:00 GMT

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்தில் சீனாவை தவிர எந்த நாடுகளும் அறியாமல் இருந்தன. இது குறித்த பல விவரங்களை மூடி மறைத்த சீனா இது குறித்து முதன் முதலாக பேசியது ஜனவரி 7 ந்தேதிதான், சீனா என்ன சொன்னதோ அதை ஆய்வு செய்யாமல் அப்படியே WHO உலகத்துக்கு தகவல் சொன்ன தேதி ஜனவரி 14. அது கூட இந்த நோய் அபாயம் கொண்ட பரவும் நோயல்ல என்று கூறியது. ஆனால் சீனா முதன்முதலாக இது பற்றி பேசிய ஜனவரி 7 ந்தேதி அன்றே நம் இந்தியா அந்த நாட்டின் மீது சந்தேகம் கொண்டு மற்ற நாடுகளை முந்திக் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதுதான் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டை அதிக அழிவில்லாமல் காப்பாற்றி வருகிறது.

அந்த நடவடிக்கைகளாவன:

· நவம்பர் மாதமே கொரானா பரவ ஆரம்பித்தும், ஜனவரி 7 தான் சீனா முதன் முதலா அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக சொல்கிறது. இந்த நிலையில் ஜனவரி 8 அன்றே இந்தியா இதை பற்றி ஆராய துறை சார்ந்த படித்த வல்லுனர்களைக் கொண்டு உயர்நிலை வல்லுநர் குழு கூட்டம் ஒன்றை நடத்தியது.

· ஜனவரி 17 அன்று சீனாவில் இருந்து வரும் பயணிகள் யார் யார் இந்தியா வரவுள்ளனர் என்ற தகவலை பெற்று அவர்கள் மீதான முழு சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது.

· ஜனவரி 25, பிரதமரின் முதன்மை செயலர் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்துறார்,

· ஜனவரி 29, N95 ரக மாஸ்க், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது, மேலும் இந்த பொருள்களின் உற்பத்தியை விரைவில் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான உததரவுகள் மேற்கொள்ளப்படுகிறது..

· ஜனவரி 30 ந்தேதி இந்தியாவின் முதல் கொரானா பாசிட்டிவ் அடையாளம் காணப்படுகிறது, உடனே 6 லேப், 6 குவாரன்டைன் சென்டர் புதிதாக உருவாக்கப்படுகிறது,

· பிப்ரவரி 1 ந் தேதி உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணி தொடங்குகிறது...

· பிப்ரவரி 3 சீனாவுக்கு இ-விசா தடை செய்யப்படுகிறது

· மேலும் அதே நாளில் வெளிநாடு செல்லும் நபர்களுக்கு டிராவல் அட்வைஸ் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது,

· பிப்ரவரி 7 ந்தேதி இந்தியாவில் வெறும் 3 கேஸ் தான், ஆனால் 24, 29 தேதிகளில் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்ய இந்தியர்களுக்கு தடை விதிக்கப்படுது...

· மார்ச் 3 ந்தேதி இந்தியாவில் வெறும் 6 கேஸ் தான், என்றாலும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யுனிவர்சல் ஸ்கிரீனிங் நடைமுறைக்கு வருகிறது,

· மார்ச் 4 பிரதமர் ஹோலி போன்ற மிகப்பெரிய மக்கள் கூடும் கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்றார்,

· அது மட்டுமல்லாமல் தான் பங்கேற்பதாக இருந்த பொது கூட்ட நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்து விட்டார்.

· மார்ச் 7 ந்தேதி பிரதமர் மோடி ரிவியூ மீட்டிங் நடத்துறார், அன்றிலிருந்து புதிய கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படுகிறது

· இந்தியா இவ்வளவு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகுதான் மார்ச் 11 ந்தேதி WHO கொரோனா வைரசை pandemic disease என அறிவிக்கிறது

· உடனே மார்ச் 12 ந் தேதியே பிரதமர் நிலைமையின் தீவிரத்தை மாநிலங்களுக்கு எடுத்துச் சொல்றார்,

· மார்ச் 13 ந்தேதியில் இருந்து பெரும்பாலான விமான போக்குவரத்து ஏப்ரல் 15 ந்தேதி வரை தடை செய்யப்படுகிறது...

· மார்ச் 14, ஆம் தேதி நிலவரப்படி 56 லேப் தயார் ஆகிவிட்டது, சோதனை கருவிகள், தடுப்பு மருந்துகள் உருவாக்க ஆராய்ச்சியாளர்களிடம் அறிவுறுத்தப்படுது, ஏற்கனவே உள்ள மருந்துகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

· மார்ச் 18 ம் தேதி 175 கேஸ் இருக்கும் போதே கட்டாய சமூக விலகல் நடைமுறைக்கு வருது, கல்வி நிறுவனங்கள் மூடப்படுகிறது,

· மார்ச் 19 ம் தேதியன்று பிரதமர் ஜனதா ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுக்கிறார்,

· அதே தேதியில் பொருளாதார நிலைமையை சமாளிக்க பொருளாதார செயற்குழு ஓன்று ஏற்படுத்தப்படுகிறது...

· மார்ச் 21 அன்று நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் மட்டும் லாக் டவுன் செய்யப்படுது,

· மார்ச் 22 அன்று ஜனதா ஊரடங்கு நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டது.

· மார்ச் 23 ந்தேதியன்று கொரானா கேஸ்களின் எண்ணிக்கை 500 இருக்கும் போதே உள்நாட்டு விமான, ரயில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது,

· மார்ச் 24 பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர்தான் முக்கியம் என கூறி வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விஷயமான 21 நாள் லாக் டவுனை நாடு முழுவதும் அமல்படுத்துறார்...

· மார்ச் 25 ,வென்டிலேட்டர், சானிடைசர், முக்கிய மருந்துகளின் ஏற்றுமதி தடை செய்யப்படுகிறது, சில அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் நிலையமாக மாற்றப்படுகிறது,

· மார்ச் 26 ந்தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏழைகளுக்கு உதவ 1.76 இலட்சம் கோடி கரீப் கல்யாண் திட்டத்தை அறிவித்து உடனடியாக அதை செயல்படுத்த தொடங்கினார்கள்,

· மார்ச் 27 ந்தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி தொழிற்துறைக்கு நிவாரண திட்டங்களை அறிவித்தது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாநில SDRF நிதியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

· பிரதமர் அலுவலகம் முதல் விஏஓ அலுவலகம் வரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகரில் இருந்து இரண்டாம் நிலை காவலர் வரை, மத்திய சுகாதார செயலரில் இருந்து அங்கன்வாடி பணியாளர்கள் வரை இரவு, பகலாக இன்று போராடுகிறார்கள். ரயில்வேயின் ரயில் பெட்டிகளை மருத்துவனையாக மாற்றம் செய்கிறார்கள்,

டெல்லி தப்லீக் கேஸ்கள் மட்டும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் கொரானா பாதிப்பு 50 க்கும் குறைவாக இருந்திருக்கும், இந்தியா முழுவதும் பெருமளவு எண்ணிக்கை குறைந்து இருக்கும்.

சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம் மட்டுமே,சென்னைய விட குறைவு, ஆனாலும் அவர்களே லாக்டவுனுக்கு அஞ்சுகிறார்கள். இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன்னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறுகிறார்கள், பழமை வாதிகளின் பிடியில் திணறும் பாகிஸ்தானில் அரசால் ஊரடங்கை சரியாக செயல்படுத்த முடியவில்லை, உண்மையில் நாம் மிகக் சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை நினைத்து பெருமைப்படும் நேரம் இது..

இந்தியா எல்லாவற்றையும் முன்னேறிய நாடுகளை விட மிக சமர்த்தாக கையாண்டு வருவதற்கு காரணம் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களையும், மாநில அரசுகளையும், அரசு ஊழியர்களையும் மிக சிறப்பாக ஒருங்கிணைக்கும் ஒரு பிரதமரை நாம் பெற்றுள்ளோம் என்பதை இப்போது கிட்டத்தட்ட உலகில் அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

https://www.india.gov.in/news_lists?a253337404

Similar News