'காலிஸ்தான்' என்ற வார்த்தையுடன் கனடாவில் காந்தி சிலை சேதம் - பிரிவினைவாதிகளின் வெறிச்செயல்

'காலிஸ்தான்' என்ற வார்த்தையுடன் கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Update: 2022-07-15 05:41 GMT

'காலிஸ்தான்' என்ற வார்த்தையுடன் கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள வண்டாரியா மாகாணத்தில் ரிச்சர்ட்மெண்ட் ஹில் எனும் நகரத்தில் விஷ்ணு கோவிலில் உள்ள காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கனடா நாட்டின் காவல்துறை இது வெறுப்பு காரணமாக நடைபெற்றுள்ள சம்பவம் என தெரிவித்துள்ளது, மேலும் சேதப்படுத்தப்பட்ட சிலையின் மீது 'காலிஸ்தான்' போன்ற வார்த்தையும் மேலும் சில அவதூறு வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை இதுபோன்ற வெறுப்பு சம்பவங்களை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், இனம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, போன்றவற்றின் அடிப்படையில் பிறரை பலிகடா ஆக்குபவர்கள் சட்டத்தின் கீழ் முழுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய தூதரகம், 'இந்திய மக்களை வன்முறை பாதைக்கு இழுக்கும் இப்படியான வெறுப்பு செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இதன்காரணமாக கனடாவில் உள்ள இந்திய மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கன்னட அரசிடம் பேசி வருகிறோம். மேலும் குற்றவாளிகள் விரைவில் நீதி என் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொள்கிறோம் என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.


Source - News 18 Tamil nadu

Similar News