பொருளாதார சிக்கலில் இலங்கை, பாகிஸ்தான் மாதிரியெல்லாம் இந்தியா இல்லை - ரகுராம் ராஜன் விளக்கம்

இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-31 09:15 GMT

இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாவது, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அளவிற்கு அந்நிய செலவாணி கையில் உள்ளதால் கவலை வேண்டாம்' என்றார்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பேசிய அவர் நாட்டின் அந்நிய செலவு விகிதம் உயர்ந்து வருவதாகவும் வெளிநாட்டு கடன்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக நாடுகள் அனைத்திலும் பணவீக்கம் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உணவுப் பொருள் எரிபொருள் விலை உயர்வால் தான் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக நாடுகளில் பணவீக்கம் குறையும்பொழுது இந்தியாவின் குறைந்து விடும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.


Source - Polimer News



Similar News