பாஜக அரசின் வெற்றித்திட்டம் : திருப்பூர் தபால் நிலையத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் துவக்கம்..!

பாஜக அரசின் வெற்றித்திட்டம் : திருப்பூர் தபால் நிலையத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் துவக்கம்..!

Update: 2019-02-21 12:24 GMT

திருப்பூரில், தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் புதனன்று நடைபெற்றது. இந்த முகாமில் 3 ஆயிரம் புதிய சேமிப்பு கணக்கு ஒரு நாளில் துவங்கப்பட்டது.


திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
தபால் நிலையங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளன.


இதில் வங்கிகளில் 3.5 சதவிகிதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில், தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கால் 4 சதவிகிதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் கூட்டு சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது.


மேலும், இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும்.


சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்யவும் மற்றும் எடுக்கவும் முடியும். ஆகையால், தபால் நிலையத்தில் வங்கி கணக்கு துவங்குவது மிகவும் உதவியாக இருக்கும் என்றனர். இதனால், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் சேமிப்பு கணக்கை தொடங்கினர்.


இது குறித்து, திருப்பூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோபிநாத் கூறுகையில், திருப்பூர் கோட்ட அளவிலான தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்கு சிறப்பு முகாம் புதன்கிழமை (20ந் தேதி) முதல் வெள்ளிக்கிழமை (22ம் தேதி) வரை நடைபெறுகிறது.


அதன்படி, திருப்பூர் மாநகரப்பகுதியான ஜெய்வாபாய் பள்ளி அருகில், காந்திநகர், அனுப்பர்பாளையம் ஆகிய 5 இடங்களில் புதனன்று நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டன' என்று தெரிவித்துள்ளார்.


Similar News