கூடுதலாக 10 ஆயிரம் தபால் நிலையங்கள் அமைக்க திட்டமிடும் இந்தியா போஸ்ட்

நடப்பு நதி ஆண்டில் மேலும் பத்தாயிரம் தபால் அலுவலகங்களை துவக்க இந்தியா போஸ்ட் திட்டமிட்டுள்ளது.

Update: 2022-08-26 05:53 GMT

நடப்பு நதி ஆண்டில் மேலும் பத்தாயிரம் தபால் அலுவலகங்களை துவக்க இந்தியா போஸ்ட் திட்டமிட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் நிறுவனம் அரசின் சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வகையில் செயல்படுவதற்கான திட்டங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக பத்தாயிரம் தபால் அலுவலகங்களை நடப்பு நிகழ்வில் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து தபால் துறை செயலர் அமன் சர்மா கூறுகையில், 'அண்மையில் நாங்கள் ஆளில்லா குட்டி விமானங்களான ட்ரான் வாயிலாக விநியோகத்தை குஜராத்தில் நடத்தினோம். சேவைகள் மக்களுக்கு மேலும் சென்றடைய கூடுதல் தபால் அலுவலகங்களை துவக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதன் காரணமாக மேலும் பத்தாயிரம் தபால் அலுவலகங்களை திறக்க அனுமதி பெற்றுள்ளோம், மக்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் வங்கி மற்றும் நிதி செய்வதில் கிடைக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது அதனால் கூடுதல் அலுவலகங்களை திறக்க உள்ளோம். இதன் காரணமாக தபால் அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை 1.7 லட்சமாக அதிகரிக்கும்' என அவர் கூறினார்.


Source - Dinamalar 

Similar News