3-ஆம் மத்தியஸ்தம் தேவையில்லை! - காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!!

3-ஆம் மத்தியஸ்தம் தேவையில்லை! - காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!!

Update: 2019-07-23 06:11 GMT


பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றார். அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இம்ரான்கான் கேட்டு கொண்டார். 


இதனை ஏற்ற டிரம்ப், நாங்கள் தலையிட தயார். இதன் மூலம் வேண்டிய உதவிகளை செய்யவும், இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாக தெரிவித்தார்.


இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி அப்படி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. 


பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. 3 - ஆம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருக்கும். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Similar News