கொரோனா பாதிப்பையும் தாண்டி அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5% ஆக உயரும்: ஃபிட்ச் மதிப்பீடு!

கொரோனா பாதிப்பையும் தாண்டி அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5% ஆக உயரும்: ஃபிட்ச் மதிப்பீடு!

Update: 2020-06-11 04:54 GMT

அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒரு சுருக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 9.5 சதவீத கூர்மையான வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது திடீரெனத் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவையே புரட்டிப் போட்டு விட்டது. சீனாவில் தொடங்கிய இதன் பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும் விளைகளை ஏற்படுத்திவிட்டது. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரையில் 8,107 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்துத் துறைகளிலும் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உற்பத்தி முடங்கியது. இது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை ஈட்டும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த , ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ செயல்பாடுகள் மூலம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 சதவீதம் வரையில் வளரும் என்று கணித்துள்ள ஃபிட்ச் நிறுவனம், அடுத்த 2021-22 நிதியாண்டில் இந்தியாப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ஊரடங்கால் தளர்ந்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு, மூலதன உதவி போன்ற சீர்திருத்தங்கள் மூலமாக வளர்ச்சியை மேம்படுத்த முயற்சித்தது. இதுபோன்ற காரணங்களால் அடுத்த ஆண்டில் வளர்ச்சி திரும்பும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News