மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வென்று கௌரவத்தை பெற்ற இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு!

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதிப்புக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

Update: 2024-03-14 07:52 GMT

ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் சென்றார். இந்த நிலையில் மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்றார் .மொரீஷியஸ்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு மதிப்பிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மொரீசியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரவுபதி  உரையாற்றினார்.


2000 ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும். ஆறாவது இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி பெற்றுள்ளார். ஜனாதிபதியின் இந்த அரசு முறைப் பயணம் இந்தியாவிற்கும் மொரிஷியசுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


SOURCE :Dinaboomi

Similar News