காலங்காலமாக கொக்ககோலா வெற்றியுடன் கோலோச்சுவது எப்படி? சுவரஸ்ய தகவல்கள்!

காலங்காலமாக கொக்ககோலா வெற்றியுடன் கோலோச்சுவது எப்படி? சுவரஸ்ய தகவல்கள்!

Update: 2020-04-10 02:32 GMT

அயல் நாட்டு நிறுவனங்களில் மற்றுமொரு அடையாளம் கொக்க கோலா. பெயர் சொன்ன மாத்திரத்திலேயே உலகின் பல நாடுகளால் அடையாளம் காணப்படும் நிறுவனம். உலகின் 200 நாடுகளுக்கு மேல் விற்பனையில் கோலோச்சுகிறது கொக்ககோலா. இதனுடைய கிளை தயாரிப்புகளாக பல ஆயிரம் தயாரிப்புகள் சந்தையில் உண்டு அவையெல்லாம் கொக்ககோலா நிறுவனத்தின் தயாரிப்புகள் என்ற விபரம் பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேல்மட்ட தலைமையில் சிலமுறை மாற்றங்கள் வந்த போதும் அமெரிக்க குளிர்பான சந்தையில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துள்ளது கொக்க கோலா.

உலகின் பல மூலையில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு இருந்த போதும், இதனை தொடர்ந்து அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல தரப்பட்ட விமர்சனம் எழுவதும் உண்டு. துரித உணவுகளை செரிமானம் செய்ய செளகரியமாக இருப்பதால் இன்றைய தலைமுறையினர் விரும்பும் பானமாக கொக்ககோலா உள்ளது. எல்லா தயாரிப்புகளும் வரவேற்பிற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டதே. ஆனாலும் மனித நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

தங்கள் தயாரிப்பின் மீது வைக்கப்படும் கேள்விகளுக்கு மக்களை சென்று சேரும் வகையில் விளம்பரங்கள் அமைத்து, வியாபார உத்திகள் கையாண்டு, போட்டிகளை எதிர்கொண்டு தங்களின் இடத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து தக்கவைத்திருக்கும் சாதனை நிறுவனமான கொக்ககோலாவின் சில குறிப்புகள் இங்கே..

1. இத்தனை வருடங்களில் கொக்க கோலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் பல்லாயிரத்தை தாண்டும். அதை ஒரு மனிதர் ஓர் நாளுக்கு ஒன்று என்ற வீதம் குடிக்க துவங்கினால் அவர்களின் அனைத்து தயாரிப்புகளை குடிக்க 9 ஆண்டுகள் ஆகுமாம்.

2. தயாரிப்பு துவங்கிய நாள் முதல் இன்று வரையில் தயாரிக்கப்பட்ட கொக்க கோலாவை 8 அவுன்ஸ் புட்டியில் நிரப்பி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் அவை நிலவையே தொட்டு திரும்பும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

3. உலகின் 94% மக்கள் தொகையால் கொக்க கோலாவின் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தினால் ஆன இலட்ச்சினை மிக எளிதாக அடையாளம் காணப்படுகிறது.

4. சராசரியாக உலகின் ஓர் மனிதர் 4 நாட்களுக்கு ஒருமுறை கொக்க கோலா நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன

5. மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பெரும் நிறுவனங்களை காட்டிலும் கொக்க கோலா விளம்பரங்களுக்காக அதிக செலவு செய்கிறது

6. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் "கொக்ககோலா டின்" உற்பத்திக்கான அலுமினியத்தின் அளவு மட்டுமே ஒவ்வொறு ஆண்டும் 300,000 டன்னை தொடுகிறது. இது அமெரிக்காவின் மொத்த அலுமினிய உற்பத்தியில் 17.4% ஆகும்.

7. சைனீஸ் மொழியில் கொக்க கோலா என்றால், "வாயை மகிழ்வாக வைப்பது" என்று பொருளாம்.

8. 1982-ஆம் ஆண்டுஇவர்கள் அறிமுகம் செய்த "டையட் கோக்" என்ற குறைவான கேலரிகள் கொண்ட கொக்ககோலா, அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே அதிக விற்பனை செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

9. 1886-ஆம் ஆண்டு ஜான்பெம்பர்டன் என்ற மருந்தாளரால் கொக்க கோலா கண்டுபிடிக்கப்பட்டது.

Similar News