பா.ஜனதாவில் இணைந்த மகன் முடிவால் பெரிதும் வேதனை - நொந்த ஏ.கே அந்தோணி!
பா.ஜனதாவில் இணைந்த தனது மகன் முடிவால் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாக ஏ.கே அந்தோணி பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜனதாவில் இணைந்தார். இது குறித்து கேரள காங்கிரஸ் தலைமையகத்தில் ஏ.கே. அந்தோணி துணை நிருபர்களிடம் கூறியதாவது :-
என் மகன் பா.ஜனதாவில் இணைந்தது தவறான முடிவு. அவன் முடிவால் நான் பெரிதும் வேதனை அடைந்தேன். நான் கடைசி மூச்சுவரை காங்கிரஸ்காரனாக இருப்பேன். பா.ஜனதா ஆர். எஸ். எஸ் க்கு எதிராக குரல் எழுப்புவேன். நேரு குடும்பத்திடம் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் .இவ்வாறு அவர் கூறினார்.