டுவிட்டரில் வீடியோ கால் வசதி அறிமுகம்!
டுவிட்டரில் புதிதாக வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமை இடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது . இந்த டுவிட்டர் செயலியை அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்துகின்றனர் . இந்த நிலையில் கடந்த ஆண்டு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கினார் .
அது முதல் டுவிட்டரில் புளூடிக் வசதி பெற பணம் செலுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது டுவிட்டர் செயலியில் ஆடியோ, வீடியோ கால் வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது .இதுகுறித்து, 'தங்களது செல்போன் எண்ணை வழங்காமல் டுவிட்டர் செயலி மூலம் எங்கிருந்தாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசலாம் என எலான்மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.