திருமலை-திருப்பதி இடையே மின்சார பேருந்து அறிமுகம் - 100 பேருந்துகள் இலக்கு நிர்ணயித்த ஆந்திர அரசு

திருமலை திருப்பதி இடையே மின்சார பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-28 06:36 GMT

திருமலை திருப்பதி இடையே மின்சார பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை-திருப்பதி இடையே மின்சார போக்குவரத்து பேருந்து சேவையை ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.

முதல் கட்டமாக 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 100 பேருந்துகள் வரை இயக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணிக்க இருவழிப் பாதை கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, ஆனால் சாதாரண பேருந்து கட்டணமாக 180 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Similar News