நடிகர் விஷாலின் புகார் குறித்து விசாரணை - மத்திய அரசு நடவடிக்கை

நடிகர் விஷால் மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மார்க் ஆண்டனி படத்திற்காக ஆறரை லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-30 10:45 GMT

ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியானது. இதன் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூபாய் ஆறரை லட்சம் லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரிய குழுவில் அதிக அளவில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றம் சாட்டியிருந்த அவர் இந்த பிரச்சனையை மராட்டிய முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். 


நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஷாலின் இந்த புகார் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் விசாரணைக்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராதா தாகூர் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளதாகவும் சென்சார் போர்டில் மிகப்பெரிய வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News