ஐ.பி.எல். போட்டியில் புதிய முறை - "பவர் பிளேயர்".!

ஐ.பி.எல். போட்டியில் புதிய முறை - "பவர் பிளேயர்".!

Update: 2019-11-05 06:12 GMT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது .


அடுத்த ஆண்டு நடைபெறவிற்கும் ஐ.பி.எல். போட்டியில் ஆர்வத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கின்ற வகையில் மாற்று வீரரை தேவையான நேரத்தில் களம் இறக்க புதிய முறை செயல் படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.


போட்டியின் விறுவிறுப்பை மாற்றும் வகையில் ‘பவர் பிளேயர்’ என்ற புதிய முறையை செய்யப்படுத்த
இருக்கிறது. அது என்ன வென்றால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத வீரர் ஆட்டத்தின் நிலையில் தேவைப்படும் போது களம் இறங்கி விளையாட முடியும்.


அதாவது 20 ரன்கள் தேவைப்படும் நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஒருவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறாமல் இருந்தால் அவரை "பவர் பிளேயராக" களம் இறக்க முடியும்.


இதேபோல் பந்து வீச்சிலும் அதிரடி பந்து விசாளரை களம் இறங்க செய்யலாம். கடைசி ஓவரில் எதிர் அணியை 6 ரன்னுக்குள் சுருக்க வேண்டிய நிலையில் அந்த அணியின் முன்னணி பவுலரை களம் இறக்கி கொள்ளலாம்.
இந்த கருத்தை குறித்து இன்று நடக்கும் குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இறுதி முடிவு எடுக்க உள்ளார்.


Similar News