தலையில் இருமுடிக்கட்டை சுமந்து பம்பையிலுருந்து நடந்து சென்று சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறாரா அமித் ஷா ? பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகம்

தலையில் இருமுடிக்கட்டை சுமந்து பம்பையிலுருந்து நடந்து சென்று சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறாரா அமித் ஷா ? பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகம்

Update: 2018-10-29 11:37 GMT
கேரள மாநிலம், கண்ணூருக்கு பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் வருகை புரிந்தார். பா.ஜ.க கண்ணூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பா.ஜ.க கேரளா முன்னாள் மாநில தலைவர் மாரார் நினைவாக இந்த அலுவலகம் “மாரார் பவன்” என பெயரிடப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அவர் பேசுகையில், கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரம் தொண்டர்களை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கைது செய்துள்ளது. பக்தர்களுடன் பா.ஜ.க பாறை போல் உறுதியாக நிற்கிறது. இது இடதுசாரி அரசிற்கு விடப்படும் எச்சரிக்கையாகும். இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை ஏற்படுத்த தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது; பா.ஜ.க, பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் துணை நிற்கும் என்று உறுதிபடுத்தினார்.
சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை; நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என பினராய் விஜயனுக்கு கேரள அரசிற்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமித் ஷா.
இதனை தொடர்ந்து மாநில பா.ஜ.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் அமித் ஷா. அப்போது, தான் இருமுடிக்கட்டு ஏந்தி சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு செல்ல விரும்புவதை அமித் ஷா கூறியதாக மாலை மலர் மற்றும் மக்கள் குரல் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.
தலையில் இருமுடி கட்டு சுமந்து பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானம் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வேன் என்றும் அமித் ஷா கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. அமித்ஷா சபரிமலை வரும் தேதி விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு பெரிய அளவிலான உற்சாகத்தை அளித்து உள்ளது.

Similar News