மத்திய பிரதேசத்தில் கலைக்கப்படுகிறதா காங்கிரஸ் ஆட்சி ?

மத்திய பிரதேசத்தில் கலைக்கப்படுகிறதா காங்கிரஸ் ஆட்சி ?

Update: 2019-05-21 06:13 GMT

மத்திய பிரதேசத்தில், முதல்வர்,கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ்அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, கவர்னருக்கு கடிதம் எழுதவுள்ளதாக, எதிர்க்கட்சியான, பா.ஜ.க போர்க்கொடி துாக்கியுள்ளது.


மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 230தொகுதிகளில், காங்., 114ல் வென்றது.பா.ஜ., 109; பகுஜன் சமாஜ், இரண்டு; சமாஜ்வாதி மற்றும் சுயேச்சை தலா, ஒரு தொகுதியில் வென்றன.பெரும்பான்மைக்கு இரண்டு பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், காஙகிராஸுக்கு ஆதரவுதெரிவித்துள்ளன.



தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், மத்தியில் மீண்டும், பா.ஜ.க அரசு அமையும் என்று தெரிய வந்துள்ளது.மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, 29 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, கோபால் பார்கவா செய்தியாளர்களிடம் கூறுகையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறது; ஆனால், தகவல் தர மறுக்கிறது.அதனால், முக்கிய பிரச்னைகள் குறித்தும், தன் அரசின் பலத்தை நிரூபிக்கவும், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோரி, கவர்னர், ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுத உள்ளோம்.முக்கியமான பிரச்னைகளில், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.



சமீப காலமாகவே, காங்கிரசுக்கும், கூட்டணி கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.ஆதரவு சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தங்களுக்கு தொகுதி ஒதுக்குவதில், வேண்டுமென்றே காங்கிரஸ் காலம் தாமதித்ததாக, மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும், காங்கிரஸ் ஈடுபட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த மாயாவதி, 'காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற போக்கை தொடர்ந்தால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம்' என, எச்சரித்திருந்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியான, பா.ஜ.,க களத்தில் இறங்கியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் கமல்நாத்தை வலியுறுத்தி உள்ளது.



மேலும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பல்வேறு எம்.எல்.ஏ க்கள் பா.ஜ.க விடம் தஞ்சம் புகுந்து விடுவார்கள் என்ற பேச்சும் அடிபடுவதால் மத்திய பிரேதேசத்தில் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது


Similar News