மத்திய அரசின் 'சமக்ர சிக்சா' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை

தமிழ்நாட்டில் 'சமக்ர சிக்சா' திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் ஆறு மாத மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-29 06:30 GMT

தமிழ்நாட்டில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான 'சமக்ர சிக்சா' திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.


இந்த நிலையில் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 26 வார ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுதியை தமிழ்நாடு அரசு தந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் நேற்று அறிவித்தது.

Similar News