இஸ்ரோவில் முதல் முறையாக யானையின் எடையில் ராக்கெட் - விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக யானையின் எடை கொண்ட ராக்கெட்டை வருகிற 23-ஆம் தேதி அதிகாலை விண்ணில் ஏவுவதற்கான பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-10-18 10:45 GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான 36 பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் ஏவுகிறது. அதற்காக இங்கிலாந்து நிறுவனத்துடன் 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' என்ற விண்வெளி ஏஜென்சியின் வணிகப்பிரிவு மற்றும் விண்வெளி துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான சி.பி.எஸ்.இ ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்காக இஸ்ரோ வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக 6 டன் அல்லது சராசரியாக ஒரு இந்திய யானையின் எடையில் மிகப்பெரிய ராக்கெட்டான எல்.வி.எம்-3 என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.இதன் முந்தைய பெயர் ஜி.எஸ். எல்.வி-மார்க் 3 ஆகும. விண்ணில் மேற்கொள்ளப்படும் முதல் வணிக ஏவல் இதுவாகும் .


வருகிற 23-ஆம் தேதி நள்ளிரவு 12.07 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்திலிருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. எல்.வி.எம்-3 என்ற வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தி புவிசார் சுற்றுப்பகுதியில் செயற்கைக்கோள்களை ஏவுகிறது. தற்போது மூன்று நிலைகளைக் கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட்டில் கிரையோஜெனிக் நிலை திரவ எரிபொருளால் இயங்கும் மையநிலை மற்றும் திட மோட்டார்கள் கொண்ட இரண்டு நிலைகள் கொண்ட ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு ஏவப்படுகின்றன. எரிபொருள் மற்றும் எஞ்சின் உள்ள கிரையோ நிலை பணிகள் நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோள்கள் ராக்கெட்டில் இணைக்கப்பட்ட இரண்டாவது ஏவு தளத்துக்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதிசக்தி கொண்ட ராக்கெட் மோட்டார்களுக்கான புதிய உந்துவிசை அமைப்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான இறுதி ஆயத்த பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது .குறிப்பாக இறுதிக்கட்ட பணியான கவுண்டவுன் வருகிற 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. புதிய ராக்கெட்டில் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த தகவல்களை தெரிவித்தனர்.





 


Similar News