ஆகஸ்ட் மாதம் வரை திருப்பதியில் 300 ரூபாய் டிக்கெட் இல்லை - ஏழுமலையானை காண நிரம்பி வழியும் கூட்டம்

திருப்பதியில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட்டுகள் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

Update: 2022-06-08 13:26 GMT

திருப்பதியில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட்டுகள் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு காரணத்தினால் திருப்பதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிகிறது, தினமும் குறைந்தபட்சம் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர் 5 மணி நேரமாவது ஆகிறது ஏழுமலையானை தரிசனம் செய்ய.


இந்நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியானவுடன் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுகிறது.

மறுபுறம் இலவச தரிசனத்தில் தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்கு 300 ரூபாய் தரிசன டோக்கன் வெளியான சில மணி துளிகளில் விற்றுத் தீர்ந்தது. தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர், 37053 பேர் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4 கோடியே 15 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

Similar News