மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் - நல்ல சகுனம் இல்லை என பதறும் ஆன்மீகவாதிகள்

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகர் நிலச்சரவின் எதிரொலியாக மண்ணில் புதைந்து வருவதும், சங்கராச்சாரிய மாதவ ஆசிரமத்தில்

Update: 2023-01-13 01:11 GMT

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகர் நிலச்சரவின் எதிரொலியாக மண்ணில் புதைந்து வருவதும், சங்கராச்சாரிய மாதவ ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவமும் பரபரப்பையும், கேட்ட சகுனமோ என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மலையோர நகரமாக ஜோஷிமத் நகரம் உள்ளது, இந்த நகரம் தற்போது பூமிக்குள் புதைந்து கொண்டே வருகிறது.

இந்தப் பகுதியில் மழை வாசஸ்தலமாகியதால் அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சில நாட்கள் முன்பு ஏற்பட்ட பெரிய அளவிலான நிலவு நடுக்கத்தினால் நகரமே மண்ணில் புதைந்து வருகிறது. 600 க்கும் மேற்பட்ட வீடுகளும், சாலைகளும் மண்ணில் புதைந்து வருவது ஜோஷிமத் நகரை அமானுஷ்யம் சூழ்ந்தது போல் உள்ளது.

இந்த நிலையில் ஜோஷிபத் நகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு பொதுவெளிகளிலும், மைதானங்களிலும் தங்கி வருகின்றனர். இதனால் இதுவரை 3000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக 40 குடும்பத்தினர் இதுவரை ஜோஷிமத் நகரை விட்டு சென்று விட்டனர். ஒரு நகரமே பூமிக்கடியில் புதையும் நிலை உருவாகியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அங்குள்ள பகவதி கோவில் சேதம் அடைந்துள்ளது, இப்பொழுது சங்கராச்சாரிய ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதுபோல் லட்சுமி நாராயணர் கோவில் சுவர்களிலும் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ஜோதிர் மரத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சுவாமி கூறுகையில், 'கோவில் சிவலிங்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டு கவலையாக இருக்கிறது சிவலிங்கத்தில் விரிசலில் ஏற்பட்டது காரணமாக ஜோஷிமத் நகருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது நல்ல சகுனமில்லை' என கூறியுள்ளதும்,

அங்குள்ள சாலைகளில் செங்குத்தான பிளவுகள் மற்றும் நீரோடைகளில் நீர் கொதிப்பதும், ஒட்டுமொத்த நகரமே புதைந்து வருவதையும் கண்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கண் முன்னாலே தங்கள் வாழ்ந்து வரும் நகரம் இப்படி மண்ணுக்குள் செல்வதை பார்த்து பலர் கண்ணீர் விடுகின்றனர். இப்படி ஒரு நகரமையும் மண்ணுக்குள் மூழ்வதும் அங்குள்ள சிவலிங்கத்தில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பது நல்ல சகுனம் இல்லை எனவும் பலரும் கருதுகின்றனர். 

Similar News