இந்த அடிமை ஆட்சி வேண்டாம் ...கலைத்து விடுங்கள் !! கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு கட்சி மூத்த தலைவர்கள் நெருக்கடி!!

இந்த அடிமை ஆட்சி வேண்டாம் ...கலைத்து விடுங்கள் !! கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு கட்சி மூத்த தலைவர்கள் நெருக்கடி!!

Update: 2019-05-20 07:47 GMT

காங்கிரசுக்கு அடிமையாய் இருந்து கொண்டு செய்யும் இந்த ஆட்சி வேண்டாம் உடனடியாக கலைத்துவிட்டு தேர்தலுக்கு வழி செய்யுங்கள் எனக்கூறி முதல்வர் குமாரசாமிக்கு அவரது மத சார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்கள் நெருக்கடி அளித்து வருகிறார்கள்.


கர்நாடகாவில் சென்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் வெற்றி கிடைத்தது. ஆனாலும் ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவரான குமாரசாமியை முதல்வராக்கியது. முக்கிய துறைகளை தம் கைவசம் எடுத்துக் கொண்ட காங்கிரஸ் குமாரசாமியை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி பலவகைகளிலும் உருட்டி, மிரட்டி ஆட்சி செய்து வருகிறது.


இதனால் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தங்கள் இஷ்டம்போல செயல்பட முடியவில்லை. அந்த கட்சியினர் தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த முக்கிய தலைவரான பசவராஜ் ஹோரத்தி தொடர்ந்து குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவர் தனது மற்ற கட்சி சகாக்களுடன் சேர்ந்து நேற்று குமாரசாமியை சந்தித்து “ இதுவரை நீங்கள் பொம்மை முதல்வராக இருந்தது போதும். மாநிலம் முழுவதும் நம்மை காங்கிரசின் அடிமைகளாக பேசுகின்றனர். நமக்கு ஒட்டு போட்ட மக்கள் ஆத்திரத்துடன் உள்ளனர். ஆட்சியை கலைத்துவிடுங்கள் ... தேர்தலை சந்திக்க வழிவகை செய்யுங்கள். சுதந்திரமாக ஆள வழி வகை செய்யுங்கள் எனக்கூறி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் குமாரசாமி இன்று டுவிட்டரில் “ கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . நீங்கள் செய்யும் சர்ச்சையால் பாஜக அல்லாத அரசை மத்தியில் நிறுவது கெட்டுப் போகும். கொஞ்ச நாள் பொறுமையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். 




https://rightlog.in/2019/05/jd-s-leader-karnataka-01/




https://twitter.com/hd_kumaraswamy/status/1129671315693088770

Similar News