"ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு தள்ளுங்கள்" : கர்நாடக காங்கிரஸ் கூட்டணி முதல்வரின் பேச்சு

"ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு தள்ளுங்கள்" : கர்நாடக காங்கிரஸ் கூட்டணி முதல்வரின் பேச்சு

Update: 2018-12-24 16:51 GMT
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரமுகர் ஹோனரகேளே பிரகாஷ் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். திங்கள் கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, பிரகாஷ் தனது காரில், மாண்டியாவில் உள்ள மைசூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரகாஷை வழி மறித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து கொலை வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலைக்கு உட்கட்சி அரசியல் பழிவாங்கல் காரணமாக இருக்கும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இரு வருடங்களுக்கு முன்பு இதே கட்சியை சேர்ந்த கேபிள் குமார் என்பவர் இதே போல் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் மாண்டியாவில் கொலை செய்யப்பட்டார்.
இதன் பிறகு, கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தின் முதல்வர் திரு குமாரசாமி அவர்கள் காவல்துறை அதிகாரியிடம் தொலைபேசியில் பேசுகையில், "கொலை செய்தவரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுதள்ளுங்கள்", என்று கூறியுள்ளார்.
https://twitter.com/NEWS9TWEETS/status/1077221077934194688?s=19
ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது, நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மனித உரிமைகள் ஆணையம் கர்நாடக முதல்வர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Based on inputs from The News Minute & News 9
Picture Courtesy : Ensuddi

Similar News