முருக பக்தர்களும் இறை நம்பிக்கை உள்ளவர்களும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிக்கை.! #KarupparKoottam #Kandashashti #வெற்றிவேல்_வீரவேல்

முருக பக்தர்களும் இறை நம்பிக்கை உள்ளவர்களும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிக்கை.! #KarupparKoottam #Kandashashti #வெற்றிவேல்_வீரவேல்

Update: 2020-07-15 04:05 GMT

கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் இந்தக் கடவுள்கள், புராணங்கள் மற்றும் மத நய்பிக்கைகளை பழித்தும், தவறாக அரத்தப்படுத்தியும், பொய்யான கருத்துக்களைப் பதிவு செயதும் பிராமண துவேஷம் என்ற பெயரில் இந்து துவேஷம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சுரேந்தர் நடராஜன் என்பவர் ஆபாச புராணம், கந்தசஷ்டி-12 என்று இந்து மத நூல்களையும் பாடல்களையும் அவமதித்து ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து முன்னணி கவன ஈர்ப்பு போராட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுக்கள் கொடுக்கப்பட உள்ளன. இந்து மக்கள் கட்சி மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த‌ வரிசையில் பாராதிய ஜனதா கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது. மாநில தலைவர் முனைவர்.முருகன் அவரது‌ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக

அறிக்கையில், "பாஜக கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுரேந்திர நடராஜன் போன்ற கபட வேடதாரிகளைக் கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும் அவரவர் வீடுகள் முன்பாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும் கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழியில் கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தானும் தனது வீட்டின் முன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் "இதே போன்று தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்களும் இறை நம்பிக்கை உள்ள அனைவரும் அவரவர் வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், "முருக பக்தர்களின் மனம் புண்படக் கூடிய வகையில் செயல்படுபவர்கள், யாருடைய பின்புலத்தில் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில், ஒடுக்குவதில் பாஜக உறுதியாக நிற்கும்" என்று உறுதி அளித்துள்ளார்.

Similar News