கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களை தங்க தகடுகளால் மூட பூசாரிகள் எதிர்ப்பு - ஏன் தெரியுமா?

கேதார்நாத் கோவிலில் கருவறை சுவர்களை தங்கத்தகடுகளால் மூட சில பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Update: 2022-09-18 13:15 GMT

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் அமைந்திருக்கிறது.இதன் கருவறை உள்பகுதி நான்கு சுவர்களையும் தங்க தகடுகளால் மூட காணிக்கையாக தங்கம் வழங்க மராட்டியத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் முன் வந்தார். அதற்கு மாநில அரசு அனுமதி பெற்று பத்ரிநாத்- கேதார்நாத் கோவில் கமிட்டி ஒப்புதல் அளித்தது. அதை அடுத்து கருவறை உள் சுவர்களை தங்கத் தகடுகளால் மூடும் பணி தொடங்கி இருக்கிறது. இதற்காக கோவில் பூசாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கத்தகடுகளால் மூடுவதற்கு பெரிய துளையிடும் கருவிகளைக் கொண்டு கருவறை சுவர் சேதப்படுத்தப்படுகிறது .பல நூற்றாண்டு கால பாரம்பரியம் மீறப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


அதே நேரம் தங்கத்தகடுகளால் மூடும் பணிக்கு சில மூத்த பூசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜயும், உள்ளமைப்பை மாற்றாமல் பாரம்பரியத்தை பின்பற்றியே தங்க தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதற்காக மாநில அரசிடமும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.





 


Similar News